கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் தொடர்பான பயிற்சி பட்டறை யாழ்ப்பாணத்தில்!

Sunday, December 19th, 2021

உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களின் ஆழுமையை வலுப்படுத்தும் வகையில்  பெண்களின் கற்றல் மற்றும் தலமைத்துவம் என்னும் பயிற்சிப்பட்டறை வில் கிளப் பின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ் கிரீன் கிராஷ் ஹோட்டலில் நடை பெற்றது

இதன்போது பல்வேறுபட்ட துறைசார் வளவாளர்களால் குறித்த பெண் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் பாலியல் சார் அத்துவம் அல்லது அது எவ்வாறு உருவாக்கப்படுகின்றது போன்ற விடயங்களுடன், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் காணப்படும் பாகுபாடுகள் தொடர்பில் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் பெண்களின் உரிமையை சரிசமனாக பார்க்காத நிலை காணப்படுவதால்  நேரடி தேர்தலில் பெண்களின் பிரதினிதித்துவம் என்பது சாத்தியமாகாததன் விழைவே தற்போது கோட்டா முறைமையை தற்போது வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப் பட்ட்டது.

இதேநேரம் 78 ஆம் ஆண்டு கோட்டா வலியுறுத்தப்பட்ட போதும் 2016 இல் தான் அது நடைமுறையானது என்றும் நீண்ட போராட்டத்தின் பின்னர்தான் இதுவும் கிடைத்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனாலும் இவ்வாறு கிடைக்கப்பெற்ற பெண்களின் வகிபாகம் அவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதால்  அதுவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Related posts: