கர்ப்பிணிப்பெண் கொலை – சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு!

Wednesday, January 25th, 2017

யாழ்.ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்துறை – கரம்பன் பகுதியில் நேற்று ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகா என்ற பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படும் சகோதரர்களான வட்டுக்கோட்டை பழைய நீதிமன்றத்தடி கரம்பகம் என்ற இடத்தைச் சேர்ந்த நாகேந்திரன் துஷியந்திரன் (வயது 30) நாகேந்திரன் துஷியந்தன் வயது 32) ஆகிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதவான் றியால் குறித்த இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: