கத்தோலிக்க ஆயர்  பேரவையின் புதிய நியமனங்கள் வெளியாகின!

Monday, May 2nd, 2016
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் நடப்பாண்டுக்கான புதிய நியமனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் உப தலைவராக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையும் செயலாளராக சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையும் நியமிக்கப்பட்டுள்ளனர்
அத்துடன் நிரந்தர உறுப்பினர் குழுவில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஜோசப் பொன்னையா ஆண்டகை, வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, வியானி பெர்னாண்டோ ஆண்டகை, ஹெரல்ட் அன்ரனி பெரேரா ஆண்டகை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏனைய நியமனங்களாக நிதித் துறை ஆணைக்குழுவின் தலைவராக வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகையும் உபதலைவர்களாக மெக்ஸ்வெல் கிறன்வில் சில்வா ஆண்டகையும் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும், துறவறம் மற்றும் குருக்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகையும் உப தலைவர்களாக நோபேர்ட் அந்திராடி ஆண்டகையும், லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும்,
மறைக்கல்வி, விவிலியப் பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக மெக்ஸ்வெல் கிறன்வில் சில்வா ஆண்டகையும் உப தலைவராக நோயல் இம்மானுவேல் ஆண்டகையும்,
திருவழிபாடு, கலாசாரப் பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக கிளிட்டஸ் பெரேரா ஆண்டகையும் உப தலைவராக நோயல் இம்மானுவேல் ஆண்டகையும்,
சமூக தொடர்பாடலுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக றேமன் விக்கிரமசிங்க ஆண்டகையும், உப தலைவராக லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும்,
பொதுநிலையினருக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக நோபேர்ட் அந்திராடி ஆண்டகையும் உப தலைவர்களாக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்  ஆண்டகையும் கிளிட்டஸ் பெரேரா ஆண்டகையும்,
நீதி, சமாதானம் மனித முன்னேற்றப் பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக வியானி பெர்னாண்டோ ஆண்டகையும் உப தலைவராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும்,
மத உரையாடல், உறவுகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும் உப தலைவராக கிளிட்டஸ் பெரேரா ஆண்டகையும்,
புலம்பெயர்ந்தோர், சுற்றுலா மற்றும் சிறைச்சாலை பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராக ஹெரல்ட் அன்ரனி பெரேரா ஆண்டகையும் உப தலைவராக லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும்,
ஒழுக்கவியல் திருச்சபை சட்ட ஆலோசகராக நோபேர்ட் அந்திராடி ஆண்டகையும் யோசவாஸ் செயலகத்திற்கு வியானி பெர்னாண்டோ ஆண்டகையும் யோசாவாஸ் நிதியத்திற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் பேரவையின் பொறுப்புகளுக்காக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: