கண்டுகொள்ளாத பேருந்துகள் – பொலிஸ் வாகனத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் – முகமாலை பகுதியில் தொடரும் அவலம்!

Tuesday, June 11th, 2024

பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்லாத சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.

இந்நிலையில், இன்றையதினம் பொலிசார் தமது வாகனத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர்,  பெற்றோர் ஒருவர் பேருந்துக்கு குறுக்காக மோட்டர் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: