கட்டைக்காட்டு சம்பவத்தில் இரு மீனவர்கள் படுகாயம்!

Thursday, June 16th, 2016

கட்டைக்காட்டு கடற்பரப்பில் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கும் தென்பகுதி கடற்றொழிலாளர்களுக்கும்; இடையே எற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கடற்பரப்பில் தென்பகுதியில் இருந்துவந்த கடற்றொழிலாளர்கள் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 48 வயதுடைய கதிரியாம்பிள்ளை அன்ரன் ஜோன் லோரன்ஸ் மற்றும் 35 வயதுடைய அல்பிரட் விசாகர் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே பொலிஸார் மேற்கொண்ட சமரச முயற்சியின் காரணமாக இரு தரப்பினருக்குமிடையிலான முறுகல் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தின் போது கட்டைக்காடு கடற்றொழிலாளர்களால் கைதுசெய்யப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த  150 க்கு மேற்பட்டவர்களும் அவர்களுக்கு சொந்தமான 61 படகுகளும்  மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் முன்னிலையில் தென்னிலங்கை மீனவர்களின் உறுதி மொழியை அடுத்து நிபந்தனைகளுடன் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட அதேவேளை படகுகளும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக  எமது செய்தியாளர் அங்கிருந்து அறியத்தருகின்றார்.

kaddaikadu-attack-08 (1)

Related posts: