கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கிய விமானம் சேதம்!

துருக்கிய எயார்லைன்ஸூக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த போது சேதமடைந்தது.
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து கடந்த 3 ஆம் திகதியன்று இலங்கைக்கு வந்த இந்த சரக்கு விமானம் கொழும்பில் இருந்து 45 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்படவிருந்தது.
இந்நிலையில் விமானத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு கொள்கலன்களில் ஒன்று, கடும் காற்று காரணமாக விமானத்தின் இயந்திரத்துடன் மோதியதால், வலப்பக்க இரண்டாம் இயந்திரப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமான நிலையத்தின் பணியாளர்கள் பணிகளுக்கு சமுகமளிக்காத நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டில் தொழில் செய்யும் வயதை உடையோர் தொகை ஒரு கோடியே 57 இலட்சம்!
சஜித்தின் அதிரடி அறிவிப்பு – அதிர்ச்சியில் ஐ.தே.க!
விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது!
|
|