சுகாதார சீர்கேட்டை உடன் தடுக்க வேண்டும் – யாழ்.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Tuesday, November 15th, 2016

யாழ்.மாநகரத்தில் ஏற்படவிருக்கும் சுகாதார ரீதியிலான அனர்த்தத்தை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ்ப்பாணம் அரச மருத்துவ அதிகரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதாரத் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 7ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் சுகாதார தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதனால் யாழ்.நகர் பகுதி முழுவதும் கழிவுப் பொருட்களால் நிறைந்து சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றது. இதனால் வயிற்றோட்டம், கொலறா, டெங்கு அகிய நோய்களின் தொற்றுக்களில் அதிகரிப்பு ஏற்படலாம். இந்நிலையில் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப் பிரச்சினைக்கு நீண்ட நாளாகியும் உரிய தீர்வையோ மாற்று முறைமைகளையோ கண்டுகொள்ளாமையால் நாம் விசனமடைந்துள்ளோம். எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தத்தை தவிர்க்க சம்பந்தப்பட்ட தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

Jaffna-Hospital-strike-newsfirst-626x3801

Related posts: