கட்டார் தொடர்பில் அமைச்சரவையில் சிறப்பு அறிக்கை!

மத்திய கிழக்கு நாடான கட்டாரின் நிலவரம் தொடர்பிலான சிறப்பு அறிக்கை ஒன்றை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவையில் அடுத்த வாரம் முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது
கட்டாருடனான ராஜதந்திர உறவுகளை சவுதி அரேபியா உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகள் இடைநிறுத்தி கொண்டுள்ளன இந்த நிலையில் குறித்த நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான சிறப்பு அறிக்கை அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அதேநேரம் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தை, அந்த நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், நாளாந்தம் தகவல்களை அமைச்சிற்கு வழங்குமாறும் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகட்டாரில் 1 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|