கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவை செய்வதே நமது இலக்கு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் அமீன் தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023

கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவைசெய்வதே நமது இலக்கு என மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் இரத்தினம் அமீன் தெரிவித்துள்ளார்..

கண்டாவளை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்து கிராமங்களிலும் கட்சி பிரிவினைகளுடன் பலர் காணப்படுகின்றனர். ஆனால் கிராமங்களில் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றது அவற்றை தீர்த்து மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற பதையில் கொண்டு செய்வதே  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணமாக காணப்படுகின்றது.

அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்காகவே அவரின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவை செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

கண்டாவளை பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சனைகள் மற்றும் பனை சார் சீவல் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நாம் மேலான கவனம் எடுத்து செயற்படுவோம்.

நாம் அனைவரும் கட்சி பாகுபாடிகள் இன்றி ஒன்றிணைந்து அனைவரது எதிர்காலத்திற்காக செயற்பட வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் இரத்தினம் அமீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: