கடும் வறட்சி : கால்நடைகள் நீர்நிலைகளைத் தேடி அலைந்து திரியும் அவல நிலை!

தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரமல்லாது கால்நடைகளும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.
குறித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் குடாநாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் வறட்சி நிலை காணப்படுகின்றது. குறிப்பாக தீவகப் பகுதிகளில் நீர்நிலைகள் கடுமையாக வற்றும் நிலை உருவாகியுள்ளதால் கால்நடைகள் பெரும் பாதிப்படைந்துள்ளதுடன் இறக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வறண்டு காணப்படுவதனால் ஒழுங்கான மேய்ச்சல் நிலங்கள் இன்றி கால் நடைகளும் உணவின்றி அலைந்து திரியும் நிலையும் உருவாகியுள்ளதுடன் அதிக வெப்பபம் காரணமாக கால்நடைகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள இருக்கின்ற நீர் நிலைகளை தேடி அலைவதையும் காணமுடிகின்றது.
Related posts:
|
|