கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Monday, May 6th, 2019

2ஆம் தவணைக்காக தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கிறன.

அதற்கமைய நேற்றையதினம் பாடசாலைகளை சுற்றியுள்ள, சுற்றுபுறத்தில் விசேட தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதியே பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள எந்த ஒரு பாடசாலைகளுக்கு அருகிலும் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளுக்கு வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக தனியான வாகன தரிப்பிடங்கள் மற்றும் மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதகாவும் காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையயே, நாட்டின் பாதுகாப்பு உறுத்திப்படுத்தப்படும் வரை பாடசாலை நடவடிக்கைகளை ஒரு வாரத்திற்கு பிற்போடுமாறு, அஸ்கிரிய மகா நாயக தேரர் அரசாங்கத்திடம் கோரினார்.

எனினும், பாடசாலை நடவடிக்கைகளை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதில்கொண்டு, யாழ்ப்பாண மாநகர எல்லைப் பகுதிக்குள், பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் விடுகை நேரமும் வாகனங்கள் உள் நுழைவதற்கு கட்டுபாடுகள் விதிக்கப்படுவதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாடசாலை நாட்களில் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மதியம் ஒரு மணி முதல் 2.00 மணி வரையும் மாநகர எல்லைப் பகுதிக்குள் பார ஊர்திகள், கனரக வாகனங்கள், டிப்பர் ரக வாகனங்கள், சுற்றுலாப் பேரூந்துகள், வடி வகை வாகனங்கள் எவையும் உட் பிரவேசிக்கவோ அல்லது வீதியோரம் நிறுத்தி வைப்பதற்கோ தடை விதிக்கப்படுகின்றது.

இவ் அறிவித்தலை மீறிச் செயல்படும் வாகனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை காவற்துறையினர் மேற்கொள்ளவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: