கடலில் மூழ்கிய பல்கலைக்கழக மாணவியும் மரணம்!

Friday, September 1st, 2017

யாழ்ப்பாண பண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.

கடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பெண்கள் கடலில் மூழ்கியுள்ளனர்.

குறித்த ஐவரும் அருகிலிருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவி செல்வி டயானா சகாயதாஸ் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தத்தின் போது நாவாந்துறையைச் சேர்ந்த 28 வயதுடைய குயின்சன் தேவதாஸ் என்பவர் ஸ்தலத்திலேயே பலியானமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts: