மருத்துவக் கல்விக்கான தகுதி தொடர்பில் வர்த்தமானி –  அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!

Tuesday, August 1st, 2017

 

மருத்துவக் கல்விக்கான தகுதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, இரண்டு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்குள்ள சிலர் தனியார் மருத்துவக் கல்வியை எதிர்க்கின்றனர். வெளிநாடுகளில் தனியார் மருத்துவ கல்லூரி வளர்ச்சியடைந்துள்ளதுடன், எமது நாட்டின் பல வைத்தியர்கள் வெளிநாட்டில் கற்றவர்கள்.அரசாங்கம் சப்ரகமுவ, வடமேல் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதுடன், இரத்தினபுரி வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யவுள்ளது.

அத்துடன் குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்யவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: