கடன் தேவையில்லை : முதலீடுகளே தேவை- அமைச்சர் ரவி கருணாநாயக்க
Saturday, May 27th, 2017நாட்டுக்கு கடன் தேவையில்லை, மாறாக முதலீடுகளே தேவைப்படுகின்றன. அந்தவகையில் கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், “வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் சுற்றுலா சென்று கொண்டிருப்பதை தவிர்த்து இலங்கையின் அபிமானத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருந்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. இந்நிலையில், இலங்கைக்கே உரிய அபிமானத்துடன் சர்வதேச ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப நான் நடவடிக்கை எடுப்பேன்.
வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி, பிரதமர், சக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதுடன், நாட்டை வெற்றிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்ல பாடுபடுவேன்” என்றார்.
Related posts:
|
|