கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது!

Monday, April 18th, 2022

புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் இன்று (18) மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று (18) சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், வணிக நோக்கங்களுக்கான எரிவாயு கொள்கலன்கள் (37.5 கிலோ) மாத்திரமே இன்று விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எரிவாயுடன் கூடிய கப்பலொன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என்றும், நாளைமுதல் சந்தைக்கு வீட்டு சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்றும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் இன்றையதினமும் லிட்ரோ சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: