கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை வீழ்ச்சி – தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரத்து 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகையில் 17,854 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வொல்பெகியா பெக்டீரியாவுடன் கூடிய நுளம்புகள் சூழலில் பரவியுள்ளதுடன் அவை விருத்தியடைய 6 மாதங்கள் செல்லும் என வைத்தியர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுப்பர் மூனினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!
குடியரசு அந்தஸ்தை பெற்று இன்றுடன் 45 ஆண்டுகள் பூர்த்தி!
திங்கள்முதல் பாடசாலைகள் மீள் ஆரம்பம் - மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான கல்வி அமைச்சு ...
|
|