கடந்த கால தவறுகளை ஆராய்ந்து அதன் பெறுபெறுகளை ஆதாரமாக கொண்டு இனிவருங்காலத்தை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உழைப்போம் – தோழர் ஜீவன்!

Friday, September 18th, 2020

நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்கள் நலன்சார்ந்ததாக அமைவதுடன் அது கட்சி மயப்படுத்தப்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும்  மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ன ஆகியோராது தலைமையில் இன்றையதினம் ஆராயப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் –

எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் ஜனநாயக அரசியல் பாதையில் காலடி வைத்ததுமுதல் இன்றுவரை சொல்லெணா சேவைகளை எமது மக்களுக்கு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது எமது மக்களின் துன்ப துயரங்களின் போதேல்லாம் அவர்களுக்கு பாதுகாவலயாகவும் இருந்துள்ளார்.

ஆனாலும் தேர்தல் காலங்களில் நாம் செய்த பெரும்பணிகளுக்கான அறுவடைகளை பெற்றுக்கொண்டது கிடையாது. ஆனால் மக்களின் சேவையை அவர் ஒருபோதும் கைவிட்டது கிடையாது.

இந்நிலையில் நாம் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை ஆராய்ந்து அதன் பெறுபெறுகளை ஆதாரமாக கொண்டு இனிவருங்காலத்தை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற குறித்த ஆராய்வுக் கூட்டத்தின்போது மாவட்டத்தில் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஒரு இலட்சம் அரச வேலைவாய்ப்பு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: