வடக்கு மாகாணத்தில் மருத்துவம்சார் உதவியை வழங்க முன்வந்துள்ளது கியூமெடிக்கா!

Thursday, April 19th, 2018

வடக்கு மாகாணத்தில் மருத்துவம் சார்ந்த பல்வேறு உதவித் திட்டங்களை வழங்குவதற்கு கியூமெடிக்கா அரச சார்பற்ற நிறுவனம் முன்வந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது –

மருத்துவம் சார்ந்த உதவித் திட்டங்களை வழங்குவதற்கு கியூமெடிக்கா என்ற அரச சார்பற்ற நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் பிரதி முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிரதி முதன்மை செயலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரிவினர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்துக்குத் தேவையான உதவிகள் தொடர்பில் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று அவர்கள் தாம் வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பில் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தில் சேவையாற்றக்கூடிய மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்குதல், மருந்துகளைப் பெற்றுக்கொள்ளல், கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணத் தொகுதிகளை வழங்கல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர்.

எனினும் வெளியில் இருந்து மருத்துவர்களை உள்வாங்குதல், மருந்துப் பொருள்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டும். ஆகவே சகாதார அமைச்சின் அனுமதிகளைப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: