ஓகஸ்ட் 1 முதல் நிபந்தனைகளுடன் மாகாணங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 29th, 2021

ஓகஸ்ட் 1 ஆம் திகதிமுதல் நிபந்தனைகளின் கீழ் குறைந்த எண்ணிக்கையான பயணிகளுடன் மாகாண போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையே வரையறுக்கப்பட்ட அளவில் இ.போ.ச. பேருந்து மற்றும் தனியார் துறை பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் அலுவலக நேரங்களில் தினமும் காலையும் மாலையும் பேருந்து சேவைகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கிடையே வரையறுக்கப்பட்ட அளவில் புகையிரத சேவைகள் ஓகஸ்ட் 1 அம் திகதிமுதல் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோன தொற்றின் டெல்டா பிறழ்வு நாட்டில் பரவி வருவதால் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிக அவதானமா இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: