ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் இ.போ.ச பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கான கட்டணங்களை ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.
Related posts:
அமெரிக்க அரசுடனான ஒப்பந்தம் இலங்கையைப் போர்ப் பூமியாக்கும் - தயாசிறி ஜெயசேகர!
உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் வழங்க பிரதமர் பரிந்துரை!
உள்நாட்டின் உற்பத்தி ஏராளமாக உள்ளது - இறக்குமதி செய்யும் சிமெந்து மூலமே விலை நிர்ணயிக்கப்படுகிறது - ...
|
|