ஒன்றுபட்ட தேசமாக, பல்லின, பாலின பரஸ்பரம் கலாசார சமய மரபுகளை மதித்து இணக்கமாக வாழும் தேசமே எமக்குத் தேவை – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகஸ்வரி தெரிவிப்பு!

Wednesday, November 10th, 2021

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாளர்’ முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகஸ்வரி பற்குணராஜா கருத்து தெரிவிக்கையில் –

குறுகிய பிளவுகள் இல்லாத ஒன்றுபட்ட தேசமாக, பல்லின, பாலின பரஸ்பரம் கலாசாரம், சமய மரபுகளை மதித்து இணக்கமாக வாழும் தேசமே எமக்குத் தேவையாகவுள்ளது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்றோ அல்லது பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்ற அடிப்படையிலோ பிளவுபடாது, அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு சட்டத்தை இந்நாட்டுக்குள் கட்டியெழுப்புவதற்கான சூழலை உருவாக்குவதே இச் செயலணியின்  நோக்கமும் பொறுப்புமாக உள்ளது..

இதேநேரம் இனம், மதம்  பிளவுகள் காரணமாக, இந்நாட்டின் இளையோர் சமுதாயமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தச் செயற்பாடுகளின் போது இளைஞர் சமுதாயத்துக்கு விசேட இடமொன்று வழங்கப்படும்.

பல்கலைக்கழகம், உயர்க்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இளைஞர், யுவதிகளும், தங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை இந்தச் செயலணிக்கு வழங்க வேண்டும்.

இதேநேரம் இலங்கை சமுகத்தின் பல்லினத் தன்மை, மற்றும் ஆண், பெண் என்ற சமூகத்தன்மை செயலணியில் எதிரொலிக்க வேண்டும் என்பது கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கமும் வலியுறுத்தப்பட்டள்ளது.

அத்துடன் இது தொடர்பில் இந்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், மத மற்றும் சிவில் அமைப்புகள் மற்றும் குழுக்களுடனும் தங்களுடைய கருத்துகளைப் பரிமாற்றிக் கொள்ளவது இச் செயலணியின் நோக்கமாகும்.

அத்துடன் மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லாமல் வரும் அனைவருக்கும் கலந்துரையாடலுக்கான கதவுகள் திறந்திருக்கும்.

இந்த அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னர், செயலணியின் கருத்துக்களும் பரிந்துரைகளும், உரிய காலத்துக்குள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்க இச் செயலணி முக்கியத்துவம்  அளிக்கும்.

இலங்கைக்குள் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்” என்பதைச் செயற்படுத்துவதற்கான ஆய்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கான பொறுப்பு,  “ஒரே நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”க்கு வழங்கப்பட்டுள்ளது. ,

இதனிடையே சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இந்தச் செயலணிக்கு வழங்கப்படவில்லை என்றும் அது, அரசியலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படும்  என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: