ஒக்ரோபருக்கு பின் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை!

Wednesday, September 29th, 2021

ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு என தெரிவித்துள்னள அமைச்சர் ரமேஷ் பத்திரன அது தொடர்பான இறுதி முடிவு வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடில்லை. அது குறித்து மக்கள் எந்தவித சந்தேகமும் தேவையற்ற பீதியையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உண்டு என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் – நாட்டில் அந்நிய செலாவணி நெருக்கடி நிலை உண்டு. அது என்றும் இரகசியமல்ல. அது தொடர்பாக நிதி அமைச்சரும் தெளிவாக அறிவித்துள்ளார். இந்த அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முக்கிய காரணம், இரண்டு வருடங்களாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை நாடு இழந்தமை ஆகும்.

அத்துடன், வரும் காலாண்டில் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சியடைந்து, அதன் மூலம் அந்நிய செலாவணி வருமானம் அதிகரிக்கும். இதனூடாக இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். நாட்டிற்கு கிடைக்கின்ற வெளிநாட்டு முதலீடுகள் மூலம் நாடு மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சுகாதார தரப்பினரின் விதிகளை பின்பற்றி மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் முன்னெட...
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை இலங்கையால் ஏற்...
பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையம் ஊடாக பெற்றுக் கொள்...