ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் புதிய சட்டம் பண அனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது – மத்திய வங்கி அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021

ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நாட்டுக்குப் பல நன்மைகளை ஈட்டித்தரும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சட்டம் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தை பரிமாற்றுவதில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதியாளர்களை துரிதப்படுத்துவதற்காக கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய சட்டத்தின்படி, ஏற்றுமதி வருமானத்தின் மீதியை அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் ரூபாவாக மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: