ஏற்றுமதி குறித்து திருப்தி அடைய முடியாது – உலக வங்கி!

தெற்காசிய வலய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி வீதம் மிகவும் குறைந்தளவில் காணப்படுவதாகவும் இதனால் இலங்கையின் ஏற்றுமதி குறித்து திருப்தி அடைய முடியாது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
2000 முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகம் 5 வீதத்தினை விடவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியை அபிவிருத்தி செய்து கொள்ள இலங்கை சாதகமான காரணிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பூகோள அமைவிடம், வர்த்தக உறவுகள், கல்வித் தகமை, அபிவிருத்தி அடைந்து வரும் நகரங்களின் சாதகத்தன்மை என்பனவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|