ஏப்ரல் 21 தாக்குதல்: பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு!

Tuesday, June 25th, 2019

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு செய்யப்படவுள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த கணிப்பீடுகள் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றன.

பயங்கரவாத தாக்குதலில் சேதமடைந்த நிறுவனங்கள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்டவை குறித்து விபரங்கள் திரட்டப்படுகின்றன.

அத்துடன் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்கள், பொதுசன போக்குவரத்து, வெடிப்பொருள் சார் தொழில்துறை, மீன்பிடித்துறை ஆகியன தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts: