ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் விரைவில் – நீதி அமைச்சர் அலி சப்ரி!

Wednesday, February 3rd, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் விரைவில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பை இந்த வருட இறுதிக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் புதிய அரசியலமைப்புச் சட்டமூலம் வெளிவரும் எனவும் நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: