எழுத்து மூல உறுதி மொழி வழங்கப்படாமையால் தொடரும் போராட்டம் !

வடமாகாணக் கல்வியமைச்சினால் ஆசிரியர்களுக்கெதிராக அநீதிகள் இழைக்கப்படுவதாகத் தெரிவித்து யாழ்.செம்மணி வீதியி லுள்ள வடமாகாணக் கல்வியமைச்சிற்கு முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆசிரியர் கள் ஆரம்பித்த தொடர்போராட்டம் இன்று புதன்கிழமை(15) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும், வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல்-10.30 மணி முதல் பிற்பகல்- 01.30 மணி வரை சுமார் மூன்று மணித்தியாலங்களாக வடமாகாணக் கல்வியமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் பணித்தடை நீக்கப்பட்ட ஆசிரியர்களை மீளவும் பாடசாலையில் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான உறுதி மொழி வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதுடன், ஆசிரியர்களு க்கு இடைக்காலத்தில் இடமாற்றம் வழங்க முடியாத காரணத்தால் எதிர்வரும்-01-01-20 18 அன்று ஆறு வருட கால சேவையைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் இடமாற்றம் வழங்கப்படும் எனவும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.
எனினும் எழுத்து மூல உறுதிமொழிகள் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Related posts:
எரிபொருள் வீண் விரயத்தை கட்டுப்படுத்த புதிய எரிபொருள் கட்டமைப்பு - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ ...
செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கை – அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க நடவடிக்கை - மோட்டா...
|
|