அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை – விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனுப்பிவைப்பு!

Sunday, October 2nd, 2022

வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் ஆளுநரின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாகாண சபைகளின் அவைத்தலைவர் ஒருவருக்கு உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றே ஒதுக்கப்படவுள்ளதுடன், அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 150 லீற்றர் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு தீர்மானிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தொலைபேசி கொடுப்பனவாக, அலுவலக தொலைபேசிக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாயும், வீடு மற்றும் கைபேசிக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, மாகாண சபைகளின் தலைவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் மற்றும் எரிபொருள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த சலுகைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்தாலும், அடுத்த மாகாண சபை கூடும் வரையில் அவைத்தலைவர் பதவி நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: