எரிபொருள் விலை உயராது !

Friday, July 22nd, 2016

எரிபொருள் விலை உயர்த்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள எரிபொருள் விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வற் வரி உயர்விற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற இடைக்கால தடை காரணமாக அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்த உள்ளதாக சில தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

எனினும் அரசாங்கம் வேறும் வழிகளில் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எனவும், எரிபொருள் விலையை உயர்த்தாது எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts: