எரிபொருள் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் குழு!

Friday, June 29th, 2018

எரிபொருள்களின் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு பெற்றோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நிதி அமைச்சு மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள்களின் விலைகளை உலக சந்தையின் விலைத்தளம்பலுக்கு அமைய மாற்றியமைக்குப் புதிய விலைச்சூத்திரமொன்று கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த விலைச்சூத்திரத்துக்கு அமைய மூன்று மாதங்களுக்கு ஒரு முறையில் எரிபொருள்களின் விலைகளை மாற்றியமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் எரிபொருள் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தும் பணியைப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் கையளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related posts: