எரிபொருள் விநியோகத்தில் யாழில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை – தவறான பொறிமுறையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை!

Thursday, June 23rd, 2022

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக கோப்பாய், காலைநகர் யாழ்ப்பாணம் வேலணை உள்’ளிட்ட பல பிரதேச செயலக பிரிவுகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக போப்பாய் பிரதேச செயலக அதிகாரிகளால் அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவித்தல் ஒட்டியதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால், அரச ஊழியர்களுக்கு தான் முன்னுரிமையா என, எரிபொருளுக்காக வரிசையில் நின்ற மக்கள் விசனமடைந்தததுடன், ஒட்டிய அறிவித்தலையும் கிழித்து எறிந்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர். மேலும் சிலர் சென்று பிரதேச செயலருடன் பேசுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.

இதேபோன்று யாழ்ப்பாணம் வேலணை காரைநகர் ஆகிய எரிபொருள் நிலையங்களிலும் இவ்வாறான ஒழுங்குபடுத்தல் சீரின்மைகளால் சிறிது நேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை இதுவரை காலமும் கூட்டுறவு துறையினரின் கண்காணிப்பில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகம் இடம்பெற்று வந்திருந்த நிலையில் சில நாள்களுக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் ஒழுங்குபடுத்தும் பொறுப்பை பிரதேச செயலகங்களுக்கு வழங்குவதாக மாவட்ட செயலகம் அறிவித்திருந்தது.

இதனால் பிரதேச செயலக ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் இதனால் நாளாந்த பொருளாதார ஈட்டல்களுக்கான வேறு இடங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட தாம் பல வேதனைகளை அனுபவிக்க வேண்டி வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்ஃ

அத்துடன் சுகாதார சேவை உள்ளிட்ட சில சேவைகள் அதிதியாவசியமானதுதான் என்றும் அவர்களுக்கு எரிபொருள் வழங்குவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிரந்ததுடன் அரசாங்க ஊழியர்களுக்கே அரசு பல நிவாரணங்களையும் சலுகைகளையும் வழங்குவதாகவும் அவற்றில் கூட தாம் புறக்கணிக்கப்படுவதால் தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பாரபட்சம் காட்ட தேவையில்லை என்றும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: