எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, April 20th, 2022

அனைத்து எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் போக்குவரத்து பௌசர்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அனைத்து எரிபொருள் போக்குவரத்து பௌசர்கள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு தடையின்றி போராட்டங்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: