எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Friday, May 6th, 2022

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்றுமுதல் மீண்டும் மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் இரண்டாயிரம் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டிகளுக்கு மூவாயிரம் ரூபாவாகும், கார், வேன் மற்றும் ஜீப் வண்டிகள் ஆகிய வாகனங்களுக்கு எண்ணாயிரம் ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் விநியோக மட்டுப்படுத்தலானது பஸ்கள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: