எமது அரசியல் வழிமுறையே யதார்த்தமானது – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட  உதவி  நிர்வாகச்  செயலாளர்  சிவகுரு பாலகிருஸ்ணன்!

Thursday, February 16th, 2017
நாம் முன்னெடுத்துச் செல்லும் அரசியல் பாதை ஊடாகத்தான் அபிவிருத்திகளை மட்டுமல்லாது அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட  உதவி  நிர்வாகச்  செயலாளர்  சிவகுரு பாலகிருஸ்ணன்  (ஜீவன்), தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பிரதேச அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகால அரசுகளுடன் நாம் இணக்க அரசியலைப் பயன்படுத்தி கிராமங்கள் தோறும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அந்தவகையில் கிராமங்களுக்கான குடிநீர் வசதி, வடக்கின் வசந்தம் ஊடான மின் விநியோகத்திட்டம் உள்ள வீதிகளின் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நாம் செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.

இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்த போது எம்மை சரணாகதி அரசியல் நடத்துகின்றவர்கள் என கூறி எள்ளி நகையாடியும் ஏளனமும் செய்த சுயலாப தமிழ் அரசியல்வாதிகள் இன்று எமது அதே வழியை பின்பற்றி தமக்கான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

குடாநாடு உள்ளிட்ட வட பகுதியின் பல பகுதிகளில் நாம் எமது இணக்க அரசியல் ஊடாக எவற்றை செய்துள்ளோம் என்பது தொடர்பில் மக்கள் நன்கரிவார்கள். எனவே மக்கள் எதிர்காலங்களில் சரியான அரசியல் தலைமைத்துவத்தை எமக்கு வழங்குவார்களே ஆனால் நாம் எதிர்காலங்களில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் மதிநுட்பமா சிந்தனைக்கமைவாக மேலும் பல அபிவிருத்தி சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்,உடனிருந்தனர்.

d

Related posts: