எந்தவொரு நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ள தயார் – இலங்கை மத்திய வங்கி ஆளுனர்!
Thursday, December 1st, 2016அரசாங்கத்தின் வருமானம் இந்த வருடத்தில் முதல் ஒன்பது மாத காலத்தில் ஒன்பது தசம் ஆறு சதவீதத்ததால் அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வல்லமையை இலங்கை மத்திய வங்கி கொண்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் வங்கியின் ஆளுநனர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இந்த விடயங்களை தெரிவித்தார்.
திறைசேரிமுறி விநியோக பிரச்சினை தொடர்பாக தெரிவிக்கையில் முதன்மை விநியோகஸ்தரான ‘பேர்ப்பச்சுவல் ட்ரெஷரி’ நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஅரசாங்க கடன் பத்திரங்கள் வழங்கப்படும் போது மத்திய வங்கி கடைப்பிடிக்கும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து, வெளிப்படைத் தன்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
நாட்டில் எந்தவொரு நிதிப் பிரச்சினையையும், நெருக்கடியையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆற்றல் இலங்கை மத்திய வங்கிக்கு உண்டு என்று தெரிவித்த வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் செயற்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும கூ4றினார்.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் அரசாங்கத்தின் வருமானம் ஒன்பது தசம் ஆறு சதவீதத்ததால் அதிகரித்துள்ளது. வற் உள்ளிட்ட புதிய வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை இதற்குக் காரணமாகும். ஏற்றுமதி செலவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஏற்றுமதித் துறையில் வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. வாகன இறக்குமதி 52 சதவீதத்தால் குறைவடையும் என்றும் கலாநிதி குமாரசுவாமி தெரிவித்தார்.
Related posts:
|
|