எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து – லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Wednesday, August 25th, 2021

கொரோவால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும் போது,  திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் நலின் கிதுல்வத்த எச்சரித்துள்ளார்.

சுவாசக் கஷ்டம் அல்லது பேசவோ நடக்கவோ இயலாமை போன்ற எந்த முன் அறிகுறிகளும் இல்லாமல், எதிர்பாராத விதமாக தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஒட்சிசன் அளவு குறைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓடுதல் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர் ஈடுபடும் போது, குழந்தையின் இயல்பான நிலையில் இருந்து ஒட்சிசன் அளவு குறைகிறதாகவும், இது சைலண்ட் ஹைபொக்ஸியா என்று குறிப்பிடப்படுகிறது.

எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குழந்தையின் ஒட்சிசன் அளவை கண்காணிக்க வேண்டுமெனவும் அவர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு சிறு செயல்பாட்டிற்குப் பிறகு குழந்தையின் ஒட்சிசன் அளவு 94 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் அல்லது ஓய்வெடுக்கும்போது ஒட்சிசன் அளவு 96 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால், உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது முக்கியம் என்றும் வைத்தியர் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆறு படுக்கைகளிலும் கொரோனா தொற்றிற்குள்ளான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,  தீவிர சிகிச்சைப் பிரிவில் இணைக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மோசமான சூழ்நிலை எழுந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஆல்பா வைரஸ் மாறுபாட்டோடு ஒப்பிடும்போது, தற்போதைய வைரஸ் வகைகள் மிகவும் முக்கியமானவை என்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் நலின் கிதுல்வத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


டெல்டா திரிபு தொற்றியவர்கள் ஆயிரக் கணக்கில் இலங்கையில் இருக்கலாம் - சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர்...
மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவி...
2024 ஆம் ஆண்டுமுதல் மும்மொழி மாவட்டமாக பெயரிடப்படுகின்றது பாதுளை மாவட்டம் - மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்...