எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கும்!

Friday, June 12th, 2020

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டங்களுக்கு அமைய தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் விரைவு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: