எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் – கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.

எனினும்  எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாக அஜித் குணசேகர மேலும் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டில் விற்பனையாகும் முட்டைகளுக்கான நிர்ணய விலை சில வியாபாரிகளால் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


விவசாயிகளிடமிருந்து நாடு நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் - விவசாய அமைச்சர் ...
மூன்று பெண்கள் உட்பட 37 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று பதவியேற்ப...
இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...