எதிர்வரும் திங்கள் கட்சித் தலைவர் கூட்டம்!

Saturday, April 17th, 2021

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டம் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள ஏப்ரல் மாதத்தின் இறுதி நாடாளுமன்ற வாரத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணைகள் மற்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்ற சட்ட மூலங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக தேடிப்பார்க்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான யோசனைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவும் அதுதொடர்பான விவாதம் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தவும் இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

எனவே எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இதுதொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: