எதிர்வரும் திங்களன்று யாழ்ப்பாணம் வருகிறது தேர்தல் ஆணைக்குழு!

Thursday, July 9th, 2020

எதிர் வரும் திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மன்னார் வருகை தந்து யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நிலமை தொடர்பில் நேரில் ஆராயவுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேரில் பயணித்து தேர்தல் நிலமைகள் மற்றும் மாவட்டத்தின் தொடர்பில் ஆராயவுள்ளதோடு பல பகுதிகளிற்கும் நேரில் சென்று நிலமைகளை கேட்டறியவுள்ளனர்.

அரச திட்டங்கள் துஸ்பிரயோகம், தேர்தல் விதிமுறை தொடர்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் நிலையில் தவிசாளரின் வருகை பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: