எதிர்கட்சிகள் முன்னெடுக்கும் திட்டங்களை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம் – வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை!

Monday, July 19th, 2021

அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திகொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழு தோற்கடிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன எதிர்கட்சிகள் முன்னெடுக்கும் திட்டங்களை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்கட்சியினரும் முன்னெடுத்துள்ள பல்வேறு தந்திரோபாயங்களால் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் பல அரசியல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன, முக்கியமான விவகாரங்களில் மாறுபட்ட கருத்துக்களை இந்த கட்சிகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ள தினேஸ் குணவர்த்தன எனினும் எதிர்கட்சிகள் முன்னெடுக்கும் திட்டங்களை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: