எட்கா உடன்படிக்கையில் இரகசியமாக கைச்சாத்திடக் கூடாது – அரச மருத்துவ சங்கம்!

Wednesday, August 24th, 2016

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேசிய கொள்கை ஒன்றை உருவாக்காது இரகசியமான முறையில் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடக் கூடாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

அத்துடன் குறித்த சர்வதேச வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட எடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள  அவர் மேலும் கூறுகையில்-

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஓர் அதிகாரசபையை உருவாக்கி அதன் அடிப்படையில் தேசிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமென மக்கள் கோருகின்றனர். இவ்வாறான கொள்கைகள் வகுக்கப்பட்டதாக பொய்யாக பிரச்சாரம் செய்து ரகசியமான முறையில் இந்தியாவுடன் உடன்படிக்கை கைச்சாத்திட ஆளும் கட்சியின் சிலர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எட்கா உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானிக்க முடியாது. அங்கு சில கட்சிகளே தீர்மானம் எடுக்கும் எனவும் இந்த உடன்படிக்கை பற்றி மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நாட்டையும் மக்களையும் ஏமாற்றி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: