தனியார் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
Sunday, March 31st, 2019
தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், தனியார் மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்து, மின் கட்டமைப்பிலிருந்து அகற்றப்பட்ட மாத்தறை மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளிலுள்ள இரண்டு மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்கீழ், 75 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
Related posts:
அறிமுகமாகிறது ரயில்வே திணைக்களத்தில் புதிய கணனி நுழைவுச்சீட்டு!
உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை - தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்...
அஸ்வசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம...
|
|
|


