எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, March 13th, 2023

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோரத்தில் உள்ள குப்பைகளை இயந்திரம் மூலம் அகற்றும் இந்தத் திட்டம் கொழும்பு மட்டக்குளி, காக்கா தீவு கடற்கரையில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை காவல்துறை சுற்றாடல் பிரிவு, இலங்கை கடற்படை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: