ஊழியர் சேமலாப நிதியிலிருந்து கடன் பெறும் சலுகை வரவு செலவு திட்டத்தில் நீக்கம்..?

Wednesday, November 16th, 2016
ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 75 வீதத்தை வீட்டுக் கடனாக பெறுவதற்கு வழங்கப்பட்ட சலுகை புதிய வரவு செலவுத்திட்டத்தில் நீக்கப்பட்டமை குறித்து தான் எதுவும் அறிந்திருக்கவில்லையென தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்தச் சலுகை என்ன காரணத்துக்காக நீக்கப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்ட அவர், 25 இலட்சம் அங்கத்தவர்களுக்கு கிடைக்கும் இந்த சலுகை நீக்கப்பட்டது குறித்து நிதி அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

75 வீத கடன் பெறும் சலுகை நீக்கப்பட்டபோதும், சேமலாப நிதியிலிருந்து வீடு கட்டுவதற்கோ காணியொன்றைக் கொள்வனவு செய்வதற்கோ, வீடொன்றைத் திருத்துவதற்கோ 30 வீதம் கடன் பெறும் சலுகையில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

sena

Related posts: