இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனை!

Saturday, September 30th, 2017

இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து வவுனிவுக்கு இன்று வவுனியா செல்லவுள்ளதாக மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரின் இரண்டு கிணறுகளில் மலேரியா நோய் பரப்பும் எனோப்ளிக்ஸ் ஸ்டிவன்னிஸய் என்ற புதிய நுளம்பு வகையொன்று அண்மையில் இனம்காணப்பட்டுள்ளது. இதனை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் நிமித்தம் கொழும்பிலிருந்து விசேட வைத்தியர் குழு வவுனியா செல்கின்றது மலேரியா நோய் இலங்கையில் மீண்டும் பரவும் அபாயம் இல்லை எனக் கணடறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts: