ஊழியர்கள் பழிவாங்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின. யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் வலியுறுத்து!

Thursday, March 18th, 2021

வடபிராந்திய போக்குவரத்து சேவையிலீடுபடும் ஊழியர்கள் பலர் பழிவாங்கப்படும் சூழலொன்று தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி போக்குவரத்து சேவையை சீராக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் –

வடக்கு மாகாணத்தில் போக்கவரத்து சேவையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் கறிப்பாக கிழராமப்புறங்களை அண்டிய பகுதிகளுக்கு போக்கவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தற்போது ஊழியர்கள் பலர் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்துவருகின்றனர் என்றுமு; குறிப்பாக பதவி நிலைகளில்  மூப்பின் அடிப்படையில் உள்ளவர்கள் பழிவாங்கப்பட்டு வரும் நநிலை காணப்படுவதாகவும் இதனால் சேவைகள் மேற்கொள்வதில் பல பிரச்சினைகளை குறித்த சபைகள் நாளாந்தம் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்ததுடன் அவற்றுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறும் கோரியிருந்தார்

குறித்த விடயங்களை அவதானத்திற் கொண்ட போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து உரிய தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவு - ஒக்ரோபர் 6 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கிறார் ப...
அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள் – மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்க...
9 வருடங்களின் பின் சடுதியாக அதிகரிக்கப்பட்டது மின் கட்டணம் – 75 வீத அதிகரிப்பு நாளைமுதல் நடைமுறை - ப...