ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத கடல்வாழ் உயிரினம்!

Tuesday, June 15th, 2021

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுருவில் பகுதியில் உயிரிழந்த நிலையில் பாரிய கடல் வாழ் உயிரினம் ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலணையின் சாட்டி கடற்கரையோரத்தை அண்டியபகுதியில் கடல்வாழ் உயிரினம் ஒன்று உயிரிருடன் கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்கள் இணைந்து அதனை படகில் கட்டியிழுத்துச் சென்று ஆழம் கூடிய பகுதியில் விட்டிருக்கின்றனர்.

அதேவேளைகடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊர்காவற்துறை பிரதேசத்தின் கடற்கரை பகுதியில் இடிக்கடி காணப்பட்ட குறித்த கடல் வாழ் உயிரினம் அப்பகுதி மீனவர்களால் ஆழ்கடலுக்கும் பலதடவைகள்  அனுப்பப்பட்டுமுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஊர்காவற்றுறையின் சுருவில் கரையோரத்தில் பாரிய கடல்வாழ் உயிரினம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

வேலணை மற்றும் ஊர்காவற்றுறை கடற்பகமியில் காணப்பட்ட அதே கடல்வாழ் உயிரினமாகவே இது இருக்கலாம் என்று இரு சம்பவங்களையும் அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இந்திய கடன்திட்டத்தின் கீழ் கிடைக்கும் யூரியாவை பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் - விவசாய ...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணிகளில் 20...
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 6268 பேர் பாதிப்பு -524 பேர் இடைத்தங்கல் ...