ஊர்காவற்துறையில் இரு இந்தியர்கள் கைது!

Wednesday, October 4th, 2017

ஊர்காவற்துறையில் இந்தியர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசா முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்து புடவை வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

38 வயதான பெண் ஒருவரும், 28 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இந்தியர்களை இன்று ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: