ஊரடங்கு சட்டம் நீக்கம்: நீண்ட நாள்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் – நாளாந்த செயற்பாடுகளை ஆரம்பித்த பொது மக்கள் !

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 41 நாட்களின் பின்னர் நீக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது நாளாந்த செயற்பாடுகளை இன்று மீளவும் ஆரம்பித்துள்ளனர்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் தொழில்களில் ஈடுபடுபவர்கள் இன்று காலை நகரங்களை நோக்கிப் பயணித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிரந்ததுடன் தனியார் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியவாறு பொதுமக்கள் தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அதேநேரம், சில பிரதேசங்களில், போக்குவரத்து வழமைக்கு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்
யாழ்ப்பாண மாவட்டத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. குறிப்பாக வர்த்தக நிலையங்கள் அனைத்துர்ம் ழமைபோன்று இன்றையதினம் திறக்கப்பட்டிருந்தன. ஆனாலும் பொதுமக்களின் வருகை குறிவாகவே காணப்பட்டது.
அத்துடன் போதுப் போக்குவரத்து சேவைகளும் தனியார் போக்குவரத்து சேவைகளும் இன்று தமது சேவைகளை முன்னெடுத்திருந்தன.
அதேநேரம் படைத்தரப்பினர் மற்றும் பொலிசாரினால் பிரதான வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகள் நீங்கப்பட்டிருந்தாளும் குறித்த இடங்களில் படைத்தரப்பினர் மற்றும் பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் பேருந்துகளின் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்களும் வழமைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|